பெட் கம்மின்ஸின் உபாதையால் மாலிங்கவுக்கு மும்பை அணியில் வாய்ப்பு கிட்டுமா?

6737
cummins injured

இந்தியன் பிரீமியர் லீக்கில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ், முதுகு வலி காரணமாக .பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதன்படி, பந்துவீச்சில் அனுபவமிக்க வீரர்கள் இன்றி நெருக்கடியை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, வேகப்பந்துவீச்சை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவை மீண்டும் பந்துவீச்சாளராக இணைத்துகொள்ள கவனம் செலுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

த்ரில்லான போட்டியுடன் ஆரம்பமாகிய இந்த பருவகால ஐ.பி.எல். தொடர்

மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர சகலதுறை வீரர்..

11ஆவது .பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 7ஆம் திகதி கோலாகலமாக மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகியது. இம்முறை போட்டித் தொடரிலும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த முன்னாள், இன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.  

எனினும், ஒருசில நட்சத்திர வீரர்களின் உபாதைகள் இம்முறை .பி.எல் தொடருக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் குறிப்பாக .பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் டேவிட் வோர்னர்(சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), ஸ்டீவன் ஸ்மித் (ராஜஸ்தான் ரோயல்ஸ்), மிச்செல் ஸ்டார்க்( கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஜேசன் பெஹ்ரண்டோர்ப்(மும்பை இந்தியன்ஸ்), மிட்செல் சாண்ட்னர்(சென்னை சுப்பர் கிங்ஸ்), நேதன் கோல்டர் நைல்(ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர்) ஆகியோர் போட்டித் தொடரிலிருந்து விலகிக் கொண்டனர்.

இதேநேரம், .பி.எல் போட்டித் தொடர் ஆரம்பமாகி 5 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், உபாதைகள் காரணமாக இன்னும் சில வீரர்கள் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இதில் கங்கிசோ ரபாடா(டெல்லி டெயார்டெவில்ஸ்), கேதர் யாதவ்(சென்னை சுப்பர் கிங்ஸ்), சஹீர் கான்(ராஜஸ்தான் ரோயல்ஸ்) மற்றும் பெட் கம்மின்ஸ்(மும்பை இந்தியன்ஸ்) ஆகியோரும் .பி.எல் தொடரிலிருந்து விலகிக் கொண்டனர்.

இதேவேளை, இம்முறை .பி.எல் தொடரில் நடப்புச் சம்பியனாக பங்கேற்க உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, தாம் பங்குபற்றிய முதல் போட்டியில் சொந்த மைதானத்தில் வைத்து முன்னாள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸிடம் தோல்வியைத் தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் குழாமில் மஹேலவுடன் இணைந்த மாலிங்க

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக…

இது இவ்வாறிருக்க, மும்பை இந்தியன்ஸ் அணி, இம்முறை ஏலத்தில் கடந்த பருவத்தில் விளையாடிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான லசித் மாலிங்க மற்றும் மிட்செல் மெக்லெனகன் ஆகியோரை கைவிட்டு புதிய வேகப்பந்து வீச்சாளர்களை ஒப்பந்தம் செய்தது.

அதிலும் தங்கள் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அவுஸ்திரேலிய அணியின் இளம் வீரர் ஜேசன் பெஹ்ரண்டோர்ப்பை 1.5 கோடிக்கு வாங்கியது. ஆனால் முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக இவ்வருட .பி.எல். ஆரம்பமாவதற்கு முன் அவர் தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.

இதனால் பல வீரர்களை தேடிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் கடந்த பருவத்தில் விளையாடிய நியூசிலாந்து அணியின் மிட்செல் மெக்லெனகனை மீண்டும் அணிக்கு கொண்டுவந்தது. எனினும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடனான முதல் போட்டியில் விளையாடிய அவர், 4 ஓவர்களுக்கு 44 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.  

அதேபோல, அவ்வணிக்காக விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றி ஏமாற்றம் அளித்தனர்.

இந்நிலையில், இம்முறை ஏலத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி, அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸை ரூ.5.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

FICA அமைப்பின் ஆலோசகராக சங்கக்கார நியமனம்

முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார..

எனினும், மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே பெட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக விளையாடவில்லை. தற்போது ஒட்டுமொத்தமாக தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இது மும்பை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதிலும், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தற்போது உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால், பெட் கம்மின்ஸுக்குப் பதிலாக எந்த வீரரை அணிக்குள் கொண்டு வருவது என்பது குறித்து அவ்வணி மும்முரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலையில், அவ்வணிக்காக சுமார் 10 வருடங்களாக விளையாடி, இம்முறை ஏலத்தில் விலைபோகாமல் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற லசித் மாலிங்கவை மீண்டும் பந்துவீச்சாளராகவும் இணைத்துக்கொள்ள மும்பை அணி ஆலோசித்து வருகின்றது.

எனவே, அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கையின் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான T20 போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக மாறிய மாலிங்க, தனது வழமையான போர்முக்கு திரும்பியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மீண்டும் பந்துவீசுவாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<