விமானப் போக்குவரத்தை மேம்படுத்த சென்னை ஐஐடி-யுடன் ஒப்பந்தம்

விமானப் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், சென்னை ஐஐடி-யும், விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையமும் இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளன.
சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் ஐஐடி டீன் ரவீந்திர கட்டு, விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் ஏ.கே.தத்து (இடது).
சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் ஐஐடி டீன் ரவீந்திர கட்டு, விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் ஏ.கே.தத்து (இடது).

விமானப் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், சென்னை ஐஐடி-யும், விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையமும் இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
அதில், சென்னை ஐஐடி சார்பில் கையெழுத்திட்ட டீன் ரவீந்திர கட்டு கூறும்போது, "இந்தியாவின் விமானப் போக்குவரத்து மேலாண்மை இந்த கூட்டு ஆராய்ச்சி மூலம் நிச்சயம் மேம்படும். 
அது மட்டுமின்றி, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களுக்கும், விமானப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு தொடர்பான அரிய தகவல்களும் கிடைக்க இந்த ஆராய்ச்சி வாய்ப்பாக அமையும். இதன் மூலம் இந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சியும் மேம்படும்' என்றார்.
இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணையம் சார்பில் கையெழுத்திட்ட ஏ.கே.தத்து கூறும்போது, "இந்த ஆராய்ச்சி இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப் பெரிய வரவேற்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும், இந்த கூட்டு ஆராய்ச்சியும், கண்டுபிடிப்புகளும் இத்துறை சார்ந்த புதிய நிறுவனங்கள் உருவாகவும் வழி வகுக்கும்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com