Published : 24 Nov 2016 10:04 AM
Last Updated : 24 Nov 2016 10:04 AM

ரூ.500, 1000 நோட்டுகள் வாபஸால் எங்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து காஷ்மீர் முஸ்லிம் உருக்கமான கடிதம்

நாட்டில் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், காஷ்மீரில் நிலைமை மாறியிருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் என்று காஷ்மீர் முஸ்லிம் ஒருவர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரி வித்து உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.

காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் ரகுமான் என்பவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

அன்புள்ள பிரதமர் மோடி, இந்தியாவில் மற்ற பகுதிகளை விட காஷ்மீரிகளின் வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பிரிவினைவாதிகளுக் கும் பாதுகாப்புப் படையினருக்கும் தொடர்ந்து சண்டை நடந்து கொண் டிருக்கும் சூழ்நிலையில், குடும் பத்தைக் காப்பாற்ற அன்றாடம் கடினமாக உழைக்கும் சாதாரண காஷ்மீரியால் என்ன செய்ய முடியும். பரிதாபமான மாநிலமாக காஷ்மீர் இருந்தாலும், பிரச்சினை களோடு இங்கு வாழ்ந்துதான் ஆகவேண்டும்.

நான் சாதாரண காஷ்மீரி. அப்சல் ரகுமான் என் பெயர். காஷ்மீரில் 2 சதவீதமே உள்ள பிரிவினை வாதிகளைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு பெண்ணுக்கு கணவனாக, 4 குழந்தைகளுக்கு தந்தையாக, வயதான பெற்றோருக்கு மகனாக இருக்கிறேன். ஆமாம்.. இந்தியன் என்ற பெருமையுடனும் காஷ்மீரி யாகவும் நகரில் ஜவுளி கடை நடத்துகிறேன்.

நான் திரும்ப திரும்ப சிந்திப்ப தெல்லாம், என் குழந்தைகளுக்கு எப்படி நல்ல எதிர்காலத்தை தருவது என்பதுதான். பல மிரட்டல் களுக்குப் பிறகும், என்னுடைய மூத்த மகனை இந்த ஆண்டு போலீஸ் தேர்வு எழுத சொன்னேன். என்னுடைய ஒரு மகள் தற்போது பிளஸ் 2 படிக்கிறாள். என் மகளுடைய வாழ்க்கைக்கு, எதிர் கால வேலைக்கு, வளர்ச்சிக்கு, இந்த ஆண்டு எவ்வளவு முக்கிய மானது என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், கடந்த 4 மாதங்களாக காஷ்மீரில் அமைதி இல்லை. வியாபாரம் இல்லை. பெரும்பாலும் தினந்தோறும் ஊரடங்கு. இந்த நிலையில் வேலை செய்யாமல் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவனால் எப்படி வாழ முடியும். எப்படியோ நான் சேமித்து வைத்திருந்த சிறிது பணத்தில் குடும்பத்தை காப்பாற்றி சமாளித்து விட்டேன். அது மட்டுமே ஒரு பிரச்சினை இல்லை.

வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ள என் மகள், பல பள்ளி நாட்களை இழந்து விட்டாள். இங்குள்ள நிலைமையை நேரில் பார்த்த என் மகன் தவறான வழியில் நடந்து கொண்டான். அவன் வயதில் உள்ள வேலை இல்லாத இளைஞர்கள், பாது காப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பிரிவினைவாதிகள் பணம் கொடுக்கின்றனர்.

வேலையில்லாத இளைஞன் இங்கு வேறு என்ன செய்ய முடியும். வயதான பெற்றோரைக் காப்பாற்ற, அழுகிற குழந்தைக்கு உணவளிக்க பணம் கிடைத்தால் இளைஞன் எதை வேண்டுமானா லும் செய்வான். போலீஸாக வேண் டும் என்ற கனவில் உள்ள என் சொந்த மகனே, எனக்குத் தெரியா மல் கல்வீச்சில் ஈடுபடும் கும்பலில் சேர்ந்துள்ளான். அவனுடைய தோளில் பெல்லட் குண்டு (வன் முறை கும்பலைக் கலைக்க பாது காப்புப் படையினர் பயன்படுத்து வது) பாய்ந்த பிறகுதான் அந்த விவரம் எனக்கு தெரிய வந்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சண்டை சற்று ஓய்ந்தபோது, பிரி வினைவாதிகள் பள்ளிகளைத் தீ வைத்து எரிக்க தொடங்கினர். தீ வைத்து எரிக்கப்பட்ட 29 பள்ளிக ளில், என் மகள் படிக்கும் பள்ளியும் ஒன்று. எங்கள் வாழ்க்கை முற்றிலும் சிதைந்துவிட்டது. எங்களால் தூங்க வும் முடியவில்லை, சாப்பிடவும் முடியவில்லை, ஏன் சாவதற்குக் கூட அனுமதி இல்லை.

அப்போது நவம்பர் 8-ம் தேதி இரவு ‘ரேடியோ காஷ்மீர்’ வானொலி யில் செய்திகளைக் கேட்டோம். நாட்டில் ரூ.500, 1000 நோட்டுகளை தடை செய்ய நீங்கள் முடிவெடுத்தீர் கள். அந்த முடிவு எங்களுக்கு மேலும் பயத்தை அதிகரித்தது. எங்களிடம் கொஞ்சம் பணம், அதுவும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. காஷ்மீரில் அமைதி இல்லாததால், அந்த பணத்தையும் வங்கிகளில் மாற்றி கொள்ள காஷ்மீரிகளுக்கு வாய்ப்பில்லை.

கறுப்புப் பணத்தைப் பற்றி ஒட்டுமொத்த இந்தியாவும் நினைத் துக் கொண்டிருந்தது. ஆனால், காஷ்மீரிகள் உயிர் வாழ்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நீங்கள் எடுத்த இந்த முடிவு, எங்கள் வாழ்க்கையை எங்க ளுக்கு திரும்ப கொடுக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், அது நடந்தது.

அதன்பிறகு காஷ்மீர் தெருக் களில் ஒரு கல்வீச்சு சம்பவமும் இல்லை. பாதுகாப்புப் படையினர் இருந்தாலும், கல்வீச்சில் ஈடுபடு பவர்களைக் காணவில்லை. ஓரிரு நாட்களில் மெதுவாக போக்கு வரத்து இயல்பு நிலைக்கு திரும்பி யது. நாங்கள் கடைகளைத் திறந் தோம். பொதுமக்கள் மார்க்கெட் டுக்கு வரத் தொடங்கினர். சந்தோஷ மான முகங்களை அப்போது நாங்கள் பார்த்தோம்.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் வங்கிகளில் வரிசையில் நிற்பதை மக்கள் கஷ்டமாக உணர்ந்திருக்க லாம். ஆனால், காஷ்மீரிகள் நாங் கள் சந்தோஷமாக வங்கி வரிசை களில் நின்றோம். என் மகள் தேர்வு பற்றி நாங்கள் மிகவும் கவலையாக இருந்தோம். ஆனால், அதன்பிறகு அவள் தேர்வு எழுத சென்றாள். என் மகள் மட்டுமல்ல. அவளை போல பலரும் சந்தோஷமாக தேர்வு எழுதி னர். இந்த ஆண்டுதான் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை (95 சதவீதம்) மிகமிக அதிகம்.

இப்படி எல்லாம் சாதகமாக நல்லவிஷயங்கள் நடந்தன. நாங் கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து, என்ன அதிசயம் நடந்தது என்று பேசிக் கொண்டோம். அதன்பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம். இந்தப் பிரிவினைவாதிகளிடம் 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான் உள்ளன. அவற்றை வாங்கிக் கொள்ள இப் போது யாரும் தயாராக இல்லை.

இந்தியாவின் மற்றப் பகுதி களில் உள்ளவர்கள் என்ன நினைக் கிறார்கள் என்பது எனக்கு தெரி யாது. ஆனால், காஷ்மீரில் வசிக் கும் நாங்கள் உங்கள் முடிவால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

உங்கள்

அப்சல் ரகுமான்

இவ்வாறு கடிதத்தில் காஷ்மீரின் நிலைமையை அப்சல் ரகுமான் உருக்கமாக கூறியுள்ளார். இந்தக் கடிதம் இப்போது வைரலாகப் பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x