ஐபிஎல் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள்: கெயில் புதிய சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெயில் 300 சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். 
நன்றி: iplt20.com
நன்றி: iplt20.com


ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெயில் 300 சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். 

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது. 

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளில் ரன் குவித்தார். அவர் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்த இன்னிங்ஸில், அவர் 2-ஆவது சிக்ஸரை அடித்ததன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேசமயம், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவரிடமே உள்ளது. காரணம், அவருக்கு அடுத்தபடியாக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் ஏபி டி வில்லியர்ஸ். அவர் 192 சிக்ஸர்கள் தான் அடித்துள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப்-5 வீரர்கள்:

  1. கிறிஸ் கெயில் - 302 சிக்ஸர்கள்
     
  2. ஏபி டி வில்லியர்ஸ் - 192 சிக்ஸர்கள்
     
  3. எம்எஸ் தோனி - 187 சிக்ஸர்கள்
     
  4. சுரேஷ் ரெய்னா  - 186 சிக்ஸர்கள்
     
  5. ரோஹித் சர்மா - 185 சிக்ஸர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com