For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்களுக்கு ஆன்லைனில் இ-டிக்கெட் வாங்க புதிய அதிவேக இணையத்தளம்

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்களுக்கு ஆன்லைனில் இ-டிக்கெட் வாங்க புதிய அதிவேக இணையத்தளத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில்களுக்கு ஆன்லைனில் இ-டிக்கெட் விற்பனையை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) மேற்கொண்டு வருகிறது. ரயில் டிக்கெட் விற்பனை ஏஜென்டுகளுக்கும் இ-டிக்கெட் விற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

IRCTC Next Generation eTicketing System

ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தளத்தில் இ-டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவி, சர்வர்களே தொங்கும் நிலை உருவாகி வருகிறது. இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்காக புதிய இணையத்தளம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது.

www.nget.irctc.co.in என்ற புதிய இணையத்தளம் மூலமாக இ-டிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பழைய வெப்சைட்டான www.irctic.co.in-க்கு பதிலாக இந்த புதிய இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இணையத்தளம் அதிவேக சர்வர்களைக் கொண்டது. இதனால் டிக்கெட் பதிவு செய்வது வேகமாக நடக்கிறது.

இந்த புதிய இணையத்தளம் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் இ-டிக்கெட்டுகள் வரை வழங்க முடியுமாம்.

English summary
IRCTC has come out with a advanced Next Generation eTicketing System to make train ticket booking easy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X