search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க வேட்டை நாயகன் மைக்கேல் பெல்ப்ஸ்
    X

    தங்க வேட்டை நாயகன் மைக்கேல் பெல்ப்ஸ்

    ஒலிம்பிக்கின் தங்க வேட்டை நாயகன் என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் பெல்ப்ஸ். அமெரிக்க நீச்சல் வீரரான இவர் ஒலிம்பிக்கில் 18 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    ஒலிம்பிக்கின் தங்க வேட்டை நாயகன் என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் பெல்ப்ஸ். அமெரிக்க நீச்சல் வீரரான இவர் ஒலிம்பிக்கில் 18 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    சோவியத் யூனியனை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லத்யானியா (1956-1964), பின்லாந்து தடகள வீரர் பாவோ நுர்மி (1920-1928), அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் பிட்ஸ் (1968-1972), அமெரிக்க தடகள வீரர் கார்ல் லீவிஸ் (1984-1996) ஆகியோர் தலா 9 தங்கப்பதக்கம் வென்றதே தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச தங்கமாக இருந்தது. இதை பெல்ப்ஸ் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் முறியடித்தார்.

    பெல்ஸ் 2004-ம் ஆண்டு ஏதென்சில் நடந்த ஒலிம்பிக்கில் 6 தங்கமும், 2 வெண்கல பதக்கமும் பெற்றார். 2008-ம் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம் கைப்பற்றினார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் 4 தங்கமும், 2 வெள்ளியும் பெற்றார் ஆக 3 ஒலிம்பிக்கிலும் சேர்த்து பெல்ப்ஸ் 18 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 22 பதக்கம் பெற்று உள்ளார்.

    பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றதன் மூலம் பெல்ப்ஸ் ஒரு ஒலிம்பிக்கில் அதிக தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற சாதனையை படைத்து இருந்தார். அதற்கு முன்பு 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் பிட்ஸ் 7 தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது. ஒரு ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (8), ஓட்டு மொத்த ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (18) வென்ற சாதனையாளராக பெல்ப்ஸ் உள்ளார்.

    மேலம் ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வென்ற சாதனை வீரராகவும் பெல்ப்ஸ் இருக்கிறார். ஒன்றுபட்ட சோவியத் யூனியன் சார்பாக பங்கேற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லாத்னியா தான் அதிக பதக்கம் வென்றவராக திகழ்ந்தார். இவர் 1956, 1960, 1964 ஆகிய 3 ஒலிம்பிக்கில் சேர்த்து 18 பதக்கம் பெற்றார். இதை பெல்ப்ஸ் லண்டன் ஒலிம்பிக்கில் முறியடித்து அதிக பதக்கம் (22) வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.

    தற்போது நடைபெற இருக்கும் ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக்கிலும் 31 வயதான பெல்ப்ஸ் பங்கேற்கிறார். 4 பிரிவுகளில் மட்டுமே (100 மீட்டர் பட்டர்பிளை, 200 மீட்டர் பட்டர் பிளை, 200 மீட்டர் தனி நபர் மெட்லே, 4*100 மீட்டர் மெட்லே தொடர்) கலந்து கொள்கிறார். ஆனால் தனிநபர் பிரிவில் பெல்ப்ஸ் தங்கம் வெல்வது மிகவும் கடினமானதே.
    Next Story
    ×