Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, December 21, 2009

பறக்கும் பட்டத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரம் – புதிய கண்டுபிடிப்பு

12 comments


Wind turbines


காற்றின் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் உலகின் மின்தேவையைவிட 100 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றைக்கொண்டு மின்சாரம் பிறப்பிப்பதற்கு காற்றாலைகளை அமைத்து காற்றாடிகள் மூலமே (Wind turbines) இதுவரை காலமும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. புவி மேற்பரப்பிலிருந்தான உயரம் அதிகரிக்கும்போதே காற்றின் வேகம் அதிகரித்து பெறக்கூடிய மின்சாரமும் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவு உயரத்துக்கு காற்றாடிகளை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவேதான் புவி மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் காற்றின் சக்தியை பயன்படுத்துவதற்காக பட்டத்தைப் பயன்படுதும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு Kitegen எனப் பெயரிட்டுள்ளார்கள்.



Kitegen

பட்டத்தை மேலே பறக்கச்செய்வதற்கு இரு பெரிய சுழல்விசிறிகளோடு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் இதற்குப் பயன்படுகிறது. இவ்விசிறிகள் உயரத்தில் தொடற்சியான காற்றுக்கு பட்டத்தைக் கொண்டுசெல்ல உதவுகின்றன. அதில் கம்பிகளின் மூலம் பட்டங்கள் இணைக்கப்படுகின்றன. இக்கம்பிகள் பட்டத்தின் உயரத்தையும், திசையையும் கட்டுப்படுத்துகின்றன. சுமார் 2000 மீட்டர் உயரம்வரை இவை பறக்கவிடப்படுகிறது.

இவ்வாறு பறக்கவிடப்பட்ட பட்டங்கள், அவை இணைக்கப்பட்டிருக்கும் தளத்திலுள்ள மின்பிறப்பாக்கியைச் சுழலச்செய்கின்றன. இதன்மூலம் பெருமளவு மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது.

இங்கே முக்கியமான விடயம், இவ்வாறு பறக்கவிடப்படும் பட்டங்களின் பறப்பை தரையிலிருந்தே கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதாகும். இவ்வாறு கட்டுப்படுத்தி, பெறப்படும் மின்சாரத்தின் அளவையும் மாற்றிக்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது பறக்கவிடப்படும் பட்டங்கள் பறவைகளைப் பாதித்துவிடாது இருப்பதற்காக ரேடார் மூலம் பறவைகள் கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப பட்டங்கள் பறக்கவிடப்படுவதுதான்.

இது காற்றாலைகளைப்போல அதிக இடத்தை அடைக்காது என்பதுடன் அதிக மின்சாரத்தினையும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். அதிகரித்துவரும் மின்தேவைக்காக எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் பிறப்பித்து, சூழலையும் மாசாக்குவதைவிட இவ்வாறான கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவையே!

இதன் தொழிற்பாட்டைக் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.


Saturday, November 7, 2009

கூகுல் வேவ் – ஒரு பார்வை

30 comments



இணைய உலகில் இன்று பரபரப்பைக் கிளப்பியிருக்கும் விடயம் கூகுல் வேவ். கூகுல் மட்டுப்படுத்தப்பட்டோருக்கே இதனைப் பாவிக்க அனுமதி அளித்துள்ளமை இதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. இன்று டிவிட்டரில் அதிகமாக டிவிட்டப்படும் முதல் பத்து வார்த்தைகளுக்குள் கூகுல் வேவும் ஒன்று. அந்தளவுக்கு அமைந்துள்ளது இதன் எதிர்பார்ப்புகள்.


கூகுல் தான் தெரிவுசெய்த பாவனையாளர்களுக்கே அழைப்புக்களை அனுப்பியுள்ளதுடன் அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களால் அழைக்கப்படும் நபர்களும் கூகுலின் மேற்பார்வையின் கீழே அழைப்புகளைப் பெறுகின்றனர். இதனால் அனுப்பப்படும் அழைப்புகள் உடனடியாகப் போய்ச் சேர்வதும் கிடையாது. அவை கிடைக்காமல் விடுவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றது. எனக்கு அண்மையிலேயே ஆதிரை அண்ணாவால் அழைப்பு அனுப்பப்பட்டு கூகுல் வேவ் கணக்கு கிடைத்தது. ஆனால் அழைப்பு அனுப்பி ஐந்து நாட்களின் பின்னரே அது கிடைத்தது.


கூகுல் வேவின் தற்போதய பாவனையாளர்கள் பலர் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் இருப்பதாக குறிப்பிடுகின்றனர். கூகுலின் user friendly தன்மை இதிலும் இருந்தாலும் இது புதிதாக இருப்பதால் பலர் சரிவர இதனை விளங்கிக்கொள்ளவில்லை என இதுபற்றி கூகுல் குறிப்பிட்டுள்ளது.




இதில் தொடங்கப்படும் ஒவ்வொரு உரையாடங்களையும் ஒவ்வொரு அலை எனக் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு அலைக்கும் தேவையான நண்பர்களை இணைத்துத்தொள்ளலாம். இவை ஒவ்வொன்றும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளைக் கொண்டிருக்கும். இவற்றை சீர்திருத்தலாம். குறிப்பிட்ட செய்திகளுக்கு மட்டும் பதிலளிக்கலாம். மேலும் இவை அனைத்தும் Real time இல் தெரிவதால் அந்த அலையில் இணைந்திருப்போர் நீங்கள் செய்பவற்றை உடனுக்குடன் காணவும் முடியும். மேலும் மேலே படத்தில் இருக்கின்ற கட்டங்களை எமக்கு ஏற்றாற்போல் மாற்ற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.


தற்போது பாவனையில் இருக்கும் கூகுல் வேவ் ஆனது ஒரு Preview version ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருக்கும் ஒவ்வொன்றும் Under construction என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனிமேல்தான் இதன் Beta version வரவிருக்கிறது.


இவ்வாறு கூகிலால் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்படும் கூகுல் வேவ் எதிர்காலத் தொடர்பாடலில் மாற்றங்களை ஏற்படுத்துமா?, மின்னஞ்சல் கலாச்சாரத்தை உடைக்குமா?, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



Tuesday, October 13, 2009

வயர் இல்லா மின்னோட்டம்

10 comments


இந்த Wireless Electricity பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். வயர்களைப் பயன்படுத்தாமல் வீடுகளிலேயே மின்சாரத்தை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்தத் தொழில்நுட்பம் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலைகளை உருவாக்கி, அந்த மின்காந்த அலைகளை காற்றினூடு கடத்தி, மின்சாரம் உபயோகிக்கவேண்டிய பொருளில் உள்ள சிறிய தொழில்நுட்பம் மூலம் அந்த மின்காந்த அலைகளை மீண்டும் மின்சாரமாக்குவதன்மூலம் வயர்கள் இல்லாது மின்சாரம் கடத்தப்படுகிறது.

இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.




டிஸ்கி - வீடியோ கொஞ்சம் பெரியதுதான். இறுதிவரை பாருங்கள். அங்கே நேரடிச் செய்முறை காட்டப்படுகிறது.

Tuesday, July 14, 2009

இரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft vs Google

12 comments

Microsoft மற்றும் Google இடையாலான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில்தான் Google இற்குப் போட்டியாக Microsoft தனது புதிய தேடுபொறியான bing இனை களத்தில் இறக்கியது. சும்மா இருக்காத Google, Microsoft இனது இயங்குதளத்திற்குப் போட்டியாக தனது புதிய இயங்குதளமான Google Chrome OS இனை அறிவித்தது. அந்த சூடு தணியுமுன்பாகவே Microsoft அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது Google இன் Docs இற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது Microsoft office இன் அடுத்த பதிப்பான Microsoft office 2010 இல் ஆன்லைனில் பயன்படுத்தும் வசதியையும் வளங்குகின்றது. இந்த Web based applications அவற்றின் ஆன்லைன் தன்மையால் install செய்ய எடுக்கும் இடமும் குறைவாகவே இருக்கும். மேலும் அவற்றை இணையத்தில் Save செய்யவும், உருவாக்கிப் பயன்படுத்தவும், அடுத்தவருடன் பகிரவும் இலகுவாக இருக்கும். Google இன் Docs இல் இப்போதிருக்கும் வசதிகளை விட இது அதிகளவான வசதிகளைக் கொண்டிருக்கும்.


இந்த வசதியை இலவசமாகவே Microsoft வளங்கவிருக்கிறது. அதற்குத் தேவையானது ஒரு Windows live கணக்கு மாத்திரமே. அது இல்லாதவர்கள் இலவசமாக உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இந்த Microsoft office 2010 இன்னும் சில மாதங்களிலேயே பாவனைக்கு வரவிருக்கிறது.


இதுவரை நாளும் இணையத்தில் ஜாம்பவானாகத் திகழ்ந்த google இற்கும், மென்பொருட் துறையில் பிஸ்தாவான Microsoft உம் மோதிக்கொள்வது அடுத்த தலைமுறைக்கான கணினித்துறையின் வளற்சிநான் ஆரம்பம் எனக் கொள்ளலாம். எது எப்படியோ, ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, இனி நம்ம காட்டில மழைதான்.

Saturday, June 20, 2009

தன்னைத் தானே சார்ச் செய்யும் செல்போன் ஆராய்ச்சியில்!!!

11 comments
Wireless Electricity பற்றிய ஆராய்ச்சிகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. Nokia நிறுவனம் இது தொடர்பான தனது ஆராய்சிகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.


இது கையடக்கத்தொலைபேசி, தொலைக்காட்சி, அன்ரனாக்கள் முதலியவற்றிலிருந்து பிறப்பிக்கப்படும் மின்காந்த அலையைக்கொண்டு மின்சாரம் தயாரிப்பதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. 5 milliwatts அளவுள்ள மின்சாரத்தை தற்போது தயாரிக்க முடிவதாக அது தெரிவித்துள்ளது. 50 milliwatts அளவுள்ள மின்சாரத்தைத் தயாரிப்பதே தமது இலக்கு என்றும், அந்த மின்சாரம் ஒரு செல்போன் பேட்டரியை சார்ச் செய்யப் போதுமானது எனவும் கூறியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் வெற்றிபெற்றால் செல்போன்கள் தம்மைத் தாமே சார்ச் செய்துகொள்ளும் எனவும், மின்சாரம் தேவையில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.


எதிர்காலத்தில்??!!!
Wireless Electricity தொடர்பாக அறிந்துகொள்ள எனது இந்தப் பதிவைப் பாருங்கள்.


Tuesday, June 9, 2009

Google vs. Bing போட்டி பாக்கலாம் வாங்க!!!

15 comments

Microsoft நிறுவனம் தனது புதிய தேடுபொறியான Bing இனை அறிமுகப்படுத்தியதிலிருந்து Googleஆ இல்லை Bingஆ சிறந்தது என்ற விவாதம் சூடு கிளப்பிக்கொண்டு இருக்கிறது. சரி, இதை எப்படித் தீர்மானிப்பது? உண்மையான நிலையை அறிய Michael Kordahi என்பவர் BlindSearch என்ற ஒரு தேடுதளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தத் தளத்தில் ஒரு குறிப்பிட்ட விடயத்தைத் தேடுமாறு நீங்கள் பணிக்கலாம். அதற்கான மறுமொழி மூன்று வெவ்வேறு Column களில் தெரிகின்றது. அதில் ஒரு Column Google இனுடைய மறுமொழியாகவும் அடுத்தது Bing இனுடையதாகவும், மூன்றாவது Yahoo இனுடையதாகவும் இருக்கும். எந்த Column எதற்குரியது என்பது மறைக்கப்பட்டு, உங்களை ஓட்டளிக்குமாறு கேட்கப்படுகிறது. நீங்கள் ஓட்டளித்த பின்னரே அவை எந்தத் தேடுபொறிக்குரியது என்ற தகவல் காண்பிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரை ஓட்டளித்த விகிதமும் காண்பிக்கப்படுகின்றது (இப்போது அதை நீக்கிவிட்டார்கள்).


அத்துடன் இந்த Column களின் ஒழுங்கு ஒவ்வொரு தடவையும் மாறுவதால் நீங்கள் ஓட்டளித்த தேடுபொறி எது என்பது அதன்பின்னர்தான் உங்களுக்குத் தெரியும். இதனால் கிடைக்கும் Result நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். இதுவரை கிடைத்த ஓட்டுக்களின் அடிப்படையில்

Google  -  45%
Bing  -  32%
Yahoo  -  23%

ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. இங்கே சென்று அதனை நீங்களும் பார்த்துக்கொள்ளுங்கள். இறுதி முடிவு என்னவென்றுதான் பார்த்துவிடுவோமே!!!

Thursday, June 4, 2009

அறிமுகமாகிவிட்டது Google Squared - புதிய தேடுபொறி

12 comments

 

எனது முன்னய பதிவொன்றில் Google Squared எனும் புதிய தேடுபொறி விரைவில் அறிமுகமாகவிருப்பதாகக் கூறியிருந்தேன். அது இப்போது அறிமுகமாகிவிட்டது. Microsoft இன் Bing அறிமுகமான சிறிது நாட்களிலேயே கூகுல் இதனை அறிமுகப்படுத்தியது, இரண்டுக்குமான போட்டியின் உச்சத்தைக் காட்டுகிறது.

 


Google Squared  ஆனது Microsoft இன் Bing எவ்வாறு தகவல்களைப் பட்டியலிடுகிறதோ, ஏறத்தாள அதேமுறையில் பட்டியலிடுகிறது. அல்லது அதைவிட ஒருபடி மேல் என்றுகூடச் சொல்லலாம். Google Squared ஆனது நாம் தேடும் தகவலினை தொகுத்து, மிகவும் தெளிவாக அதுபற்றிய விளக்கம், சம்பந்தப்பட்ட படம், அதன் செயற்பாடுகள் என அனைத்துத் தேவையான விடயங்களையும் பட்டியலிடுகிறது. அது மட்டுமல்லாது இவ்வாறு பட்டியலிடும் விடயங்கள் நாம் தேடும் விடயத்துக்கேற்ப மாறுபடுகிறது. அந்தந்த விடயங்களில் எது மிக முக்கியமோ, அதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.  எமக்கு வேறு விடயங்களும் அதில் தேவை என்றால் நாமாக இன்னுமொரு வரியைச் சேர்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

 



உதாரணமாக நான் தேடிய planets என்ற பதத்திற்கு படத்தில் காட்டியதுபோல முடிவுகள் கிடைக்கின்றன. ஒரு வரியில் இருக்கும் முடிவுகள் அனைத்தும் ஒரு தளத்திற்கே சொந்தமானவை அல்ல, அவை பாவனையாளர்களின் முன்னய தெரிவுகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்தே தெரிகின்றன.

 

உதாரணத்திற்கு நான் தேடிய planets என்பதற்கு வந்த Earth என்ற முடிவில் படம் ஒரு தளத்திலிருந்தும், விளக்கம் இன்னொரு தளத்திலிருந்தும் கிடைக்கின்றது. உங்களுக்கு அந்தப் படம் வேண்டுமானால் படத்தில் கிளிக்கி அந்தப் படம் உள்ள தளத்திற்குச் செல்லலாம். அது வேறொரு Tap இலேயே திறக்கும். விளக்கத்தை இன்னொரு Tap இல் திறந்துகொள்ளலாம். படமும் விளக்கமும் அதிகமானோரால் விரும்பப்பட்டதாக இருப்பதால் உங்களுக்கு சிறந்ததே கிடைக்கும். இங்கே சென்று Google Squared இனை பரிசோதித்துப் பாருங்கள்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக இது நாம் மிகவும் பழகிய கூகுலின் முறை.  கூகுலில் தேடும் முறை எமக்கு பழகியதாகையால் இதிலும் இலகுவாக இருக்கும். அத்துடன் இவ்வாறு தகவல்களை தொகுத்துத் தருவதால் மாணவர்களுக்கு இது மிக உதவியானதொரு முறை. சாதாரணமாக தேடி தேவையானதை எடுப்பதற்கு போதும் போதுமென்றாகிவிடும். இதிலே விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதால் தேவையற்ற தளங்களுக்குள் போய் நேரத்தை வீண்டிப்பது தவிர்க்கப்படும்.

 

 

கூகுலின் இந்த அதிரடியால் Microsoft இன் Bing  இணையச் சந்தையைப் பிடிப்பதற்கு கடினமாகத்தான் இருக்கப்போகிறது.


Monday, June 1, 2009

மென்பொருளின் துணையின்றி Youtubeஇல் வீடியோ தரவிறக்க..

19 comments

Youtubeஇல் வீடியோக்களைப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். சில வேளைகளில் அவற்றைத் தரவிறக்கி வைத்திருக்க வேண்டும் என நினைப்போம். அதற்கு கணினியில் அதற்கான மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் Youtubeஇல் இருந்து வீடியோ தரவிறக்கிக்கொள்ள முடியாது.

ஆனால் அதற்காக சில தளங்கள் உள்ளன. அவற்றில் சென்று நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனைக் கொடுத்தால் நேரடியாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.

முதலில் KissYouTube என்ற தளத்தைப் பார்ப்போம்.

இதிலே வீடியோ தரவிறக்குவது மிகமிகச் சுலபம். உதாரணமாக நீங்கள்

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

என்ற வீடியோவைப் பார்க்கிறீர்கள். அது உங்களுக்குப் பிடித்துவிடுகிறது. அதை தரவிறக்கிக்கொள்ள விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.  அதற்கு உங்கள் உலவியின் Address Bar இல் உள்ள மேலே குறிப்பிட்ட URL இல் Youtube என்ற பகுதிக்கு முன்னால் kiss என்ற பதத்தைச் சேர்த்துவிட்டால் போதும்.
http://www.kissyoutube.com/watch?v=CCYRkC40KDQ



அந்த வீடியோவை தரவிறக்குவதற்கான பட்டன் வந்துவிடும். இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம்.  இதில் FLV Movie File ஆகவே வீடியோ கிடைக்கின்றது. இங்கே சென்று அதை இயக்குவதற்கான மென்பொருளை இறக்கிக்கொள்ளலாம்.

இரண்டாவது தளம் Vixy.net


இந்தத் தளத்தின் சிறப்பு இதில் நீங்கள் Youtube விடியோவை உங்களுக்குப் பிடித்த Format இல் தரவிறக்கிக்கொள்ள முடிவதுதான்.

நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனை இந்தப் பெட்டியில் இட்டபின் அந்த வீடியோ எந்த Format இல் வேண்டுமோ, அதை கீளேயுள்ள பெட்டியில் தெரிவுசெய்தபின் தரவிறக்கிக் கொள்ளலாம்.

Saturday, May 30, 2009

உங்கள் பிளாக்கின் Bookmark ஐகானை மாற்றுவது எப்படி?

16 comments
எனக்குப் பின்னூட்டத்தில் நண்பர் வெங்கிராஜா பிளாக்கின் Bookmark ஐகானை (Favicon) எவ்வாறு மாற்றுவது எனக் கேட்டிருந்தார். பொதுவாக பிளாக்கர் பிளாக்குகளில் பிளாக்கரின் இந்த ஐகானே தெரியும்.

நான் எனது பிளாக்கிற்கு ஐந்தறைப்பெட்டி என்பதைக் குறிக்கும் வகையில் ஐந்தை இட்டுள்ளேன். இதை மாற்றுவது மிகவும் சுலபம்.
முதலில் இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள்.



அங்கேயே அவர்கள் 18000இற்கும் மேற்பட்ட அனிமேசன் மற்றும் சாதாரண Faviconகளை தயாரித்து வைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றைப் பாவிக்க விரும்பினால் மேற்கூறிய தளத்திலுள்ள goto the favicon gallery என்ற லிங்கை கிளிக்கி செல்லுங்கள்.


அங்கே உங்களுக்கு பிடித்தமான faviconஇனைத் தெரிந்து அதன் அருகிலுள்ள HTML embed code என்பதைக் கிளிக்கி வரும் Codeஇனை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

இல்லாவிட்டால் உங்களுக்குப் பிடித்தமான படத்தை இட விரும்பினால் அங்கே இலவசமாக உங்கள் பாவனையாளர் கணக்கு ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உருவாக்கிய உங்கள் பாவனையாளர் பக்கத்திலே படத்தில் காட்டிய பகுதியினூடு நீங்கள் விரும்பிய படத்தைத் தெரிவுசெய்து அப்லோட் செய்யுங்கள்.


பின்னர் அதற்கு நீங்கள் விரும்பிய பெயரைத் தெரிவுசெய்து அதை save செய்யுங்கள்.


பின் அந்த Favlcon code இனை படத்தில் காட்டியவாறு கிளிக்கி வரும் நிரலினை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வெட்டி எடுத்துக்கொண்ட நிரலினை உங்கள் பிளாக்கின் Edit Html பகுதிக்குச் சென்று அங்குள்ள /b:skin> என்ற பகுதிக்கும் /head> என்ற பகுதிக்கும் நடுவில் ஒட்டி, Save Template இனைக் கிளிக்குங்கள்.
இப்போது நீங்கள் தெரிவுசெய்த படம் உங்கள் பிளாக்கின் FavIcon ஆக தெரிவதைக் காணலாம்.

Friday, May 29, 2009

உங்கள் ஒவ்வொரு இடுகைக்குமான ஹிட்ஸ்களை தனித்தனியே அறிய…

16 comments


நேற்று ஒரு ஆங்கில பிளாக்கில் ஒவ்வொரு இடுகைகளையும் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என எண்ணிச் சொல்லும் இந்த வசதியைப் பார்த்தேன்.


 அதனைக் கிளிக்கியபோது கிடைத்த JavaScript நிரல்தான் இது. உபயோகமாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் உங்கள் பிளாக்கில்  பின்வருமாறு நிறுவிக்கொள்ளுங்கள்.

தமிழிஷின் ஓட்டுப் பட்டையை நிறுவும் அதே முறையில்தான் இதையும் நிறுவ வேண்டும். முதலில் உங்கள் பிளாக் Dashboard -க்கு சென்று Layout -ஐ கிளிக் செய்து, Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expand Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

பின்பு  data:post.body/> என்ற பகுதியைத் தேடிக் கண்டுபிடிக்கவும்.


அதன் கீழாக இந்த Code இனைச் சேர்க்கவும்.

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>

<div id='hit-counter'>

&lt;a href=&#39;http://csharpdotnetfreak.blogspot.com&#39; rel=&#39;follow&#39;&gt;

<script src='http://blogspot.100webspace.net/pageviews.php' type='text/javascript'/> &lt;/a&gt;


</div></b:if>







பின்பு Save Template என்ற பட்டனை கிளிக் செய்து விட்டால் சரி. அதன் பிறகு உங்களது இடுகைகளின் ஒவ்வொரு பார்வைகளும் எண்ணப்படும். உங்களுக்கும் ஒவ்வொரு இடுகைக்குமான ஹிட்ஸ்களை தனித்தனியே அறிந்துகொள்ளலாம்.

Thursday, May 28, 2009

அதிவேக வசதிகளுடன் Google chrome 2.0

3 comments
எனக்கு ஏன் கூகுல் குறோம் பிடிச்சிருக்கு தெரியுமா? என்னோட நெற் ஸ்பீடுக்கேற்ற தரமான உலவி!

என்ன இது சோப்பு வெளம்பரம் மாதிரு தொடங்கறானேன்னு பாக்கிறீங்களா? உண்மையும் அதுதான். அதிவேக இணைய இணைப்பு பயன்படுத்துபவர்கள் இதனை உணராவிட்டாலும், இன்னும் Dial up connection இல் அல்லாடிக்கொண்டிருப்பவர்களுக்கு இதன் வித்தியாசம் தெரியும். இதில் இணையம் பக்கங்கள் லோட் ஆக எடுக்கும் நேரம் குறைவு.


அதுமட்டுமா?, திறப்பதற்கான கட்டளையை பிறப்பித்த அடுத்த வினாடியே இது திறந்து நிற்கும். காரணம் இதில் Menu bar, Tool bar என்று எந்த bar உம் இல்லை. Bar இருக்கும் ஏனய உலவிகள் Barல இருந்து வர்ற  சரக்கடித்தவன் போல தவழ்ந்து திறந்து வருவதற்குள் குறோமில் இரண்டு பதிவுகள் படித்து முடித்திருக்கலாம். அது மட்டுமா? வெறும் Address bar மட்டும் இருக்கிறதால இணையப்பக்கத்தோட பார்வையிடும் அளவும் அதிகம். இவ்வளவு வசதியும் அதோட Beta verson ல. இப்போ அதோட அடுத்த verson இன்னும் அசரடிக்கிற வசதிகளோட வந்திருக்கு.

இந்த புதிய குறோம் இன்னும் வேகமான உலவுதலுக்கு உதவும். அதோட மட்டுமில்லாமல் இதில் புதிதாக Full screen வசதியும் செஞ்சிருக்காங்க. நீங்க இதில உலவும்போது F11 விசையை அழுத்தி இந்த Full screen வசதியை எடுத்துக்கலாம். இந்த Full screen வசதியில வீடியோ கூடபு பாக்க முடியுமாம். இப்படி Full screen ஆ பாக்கிறப்ப அதில எந்த ஒரு Bookmarks பட்டன்களோ Address bar எதுவும் தெரியாது. திரும்ப F11 அழுத்தி, அல்லது ரைட் கிளிக் பண்ணி திரும்பவும் நார்மல் வின்டோவுக்கு வந்திடலாம்.

அது மட்டுமில்லாம இதில இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செஞ்சிருக்காங்க. இதுக்கு மேல என்னதான் வேணும் ஒரு உலவிக்கு? நெருப்பு நரிக்கு நல்ல போட்டிதான் இது! இங்க போய் இதைத் தரவிறக்கிக்கொள்ளலாம்.

Tuesday, May 26, 2009

பயனுள்ள facebook டிப்ஸ்கள்

6 comments
  •  நெருப்பு உலவியின் side bar இல் facebook chat இனை நிறுவிக்கொள்ள

நெருப்பு உலவியின் சைடு பாரில் facebook chat இனை நிறுவி facebook செல்லாமலேயே chat செய்ய முதலில் உங்கள் நெருப்பு உலவியில் bookmark பகுதியைத் திறந்து அதில் organize bookmark இனைத் தெரியுங்கள்.



அடுத்ததாக கீழே காட்டியுள்ளவாறு நிரல்களை நிரப்புங்கள்
§  Name: Facebook Chat
§  Location: http://www.facebook.com/presence/popout.php

அதிலுள்ள Load this bookmark in sidebar. இனை டிக் செய்யுங்கள்.



அதன்பிறகு நெருப்பு உலவியின் View பகுதிக்குச் சென்று Sidebar இனைத் தெரிந்து அதில் bookmark இனைத் தெரிந்துகொள்ளுங்கள்.



இப்போது facebook chat உங்கள் சைடு பாரில் தயார்!




  • Facebook செல்லாமலேயே உங்கள் Desktop இல் chat செய்ய



இங்கே சென்று Gabtastik  என்ற மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். Facebook செல்லாமலேயே நீங்கள் Chat செய்ய முடியும்.
  • Facebook இல் உங்கள் ஆல்பத்தை அப்படியே தரவிறக்கி எடுத்துக்கொள்ள



இந்த நெருப்பு உலவியின் add-ons உங்கள் Facebook ஆல்பத்தை அப்படியே தரவிறக்கி எடுத்துக்கொள்ள உதவும்.
  • உங்கள் பிளாக்கின் RSS இனை Facebook இல் இணைக்க

Facebook இல் உங்கள் Profile பகுதிக்குச் சென்று அதில் What's on your mind?  என்ற பெட்டிக்குக் கீளே உள்ள Settings இனை கிளிக்குங்கள்


அதில் Blog/Rss இனைத் தெரியுங்கள்.


அதில் உங்கள் பிளாக்கின் URL இனை இட்டு பட்டனை அமுக்குங்கள். இனி உங்கள் பிளாக்கின் இடுகைகள் தானாகவே Facebook இல் தெரியும்.

Saturday, May 23, 2009

பதிவர்கள் கவனம், உங்கள் பிளாக் முடக்கப்படலாம்!!!

26 comments

இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழ்ப் பதிவர்களின் பிளாக்குகளில் malware காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தமது பிளாக்குகள் காணாமல்ப் போய்விட்டது என்ற புலம்பல்களும் தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழ் பிளாக்குகளில் malware பெரும்பாலும் NTamil திரட்டியின் Vote Button காரணமாகவே வருகின்றது. அது அல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் வேறு Java script நிரல்கள் மூலமும் வரலாம். இதனை எனக்குத் தெரிந்து லோசன் அண்ணாதான் முதன்முதல் அறிவித்தார். ஆனால் அதன்பின்னும் பலரது பிளாக்குகளில் இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.


Google Chrome இல் உலவுபவர்களுக்கு இந்த எச்சரிக்கை தெரியும். ஏனய உலவிகள் தாமாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிடுவதால் அவற்றில் உலவுபவர்கள் இதனை உணர்வதில்லை.

Malware என்றால் என்ன? இது malicious Software இலிருந்து பிறந்த பதமாகும். இது ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் கணினி உரிமையாளரின் அனுமதியின்றி, அவருக்குத் தெரியாமலேயே கணினிக்குள் புகுந்து அதனை நாசம் செய்துவிடும். Malware ஆனது கணினி வைரஸ், Worms, trojan horses, Spyware போன்ற அனைத்துத் தீய சக்திகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு மென்பொருள். இது மின்னஞ்சலினூடும், இணையப்பக்கங்களில் ஒளிந்திருந்தும் உங்கள் கணினிக்குள் புகுந்துவிடும். பிறகு அதனுடன் தையா தக்கா ஆடி அதனை அகற்ற பெரும்பாடு படவேண்டும்.


இவ்வாறு Malware காணப்படும் பிளாக்குகளை கூகுல் முடக்கி வருகின்றது. உங்கள் பிளாக் முடக்கப்பட்டால் அதனை மீளப் பெற இயலாது. உங்கள் பதிவுகள், கஸ்டப்பட்டுச் சேர்த்த Followers எல்லாம் வீணாகிவிடும். உங்கள் பிளாக்கில் NTamil vote button நிறுவியிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதனை அகற்றிவிடுங்கள். நீங்கள் நிறுவியிருக்கும் Gadgets கள் வேறு ஏதாவதும் Malware கொண்டிருக்கலாம். எதற்கும் கீழே உள்ள பெட்டியில் உங்கள் பிளாக்கின் URL இனை இட்டு பட்டனை தட்டிப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.






Malware இருப்பதாக தெரிந்தால் உங்கள் பிளாக்கிலுள்ள வேறு தளங்களிலிருந்து பெறப்பட்ட Gadgets ஒவ்வொன்றாக கழற்றி பரிசோதியுங்கள். உங்கள் பிளாக்கைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy